இந்த வலைதள பக்கத்தில் நாவல் கொரோனா வைரஸ் குறித்து பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் உலவி வரும் கட்டுக்கதைகள் மற்றும் போலி செய்திகளை அம்பலப்படுத்தி மெய் தகவலை தருகிறோம். உலகம் முழுவதும் உள்ள நம்பத்தகுந்த கருத்து வளங்களை சேகரித்து சரிபார்த்து அதன் அடிப்படையில் எமது விஞ்ஞானிகள் குழு மறுப்பு கூற்றுக்களை வெளியிடுகிறது. தற்போது நம்மிடம் உள்ள அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கருத்துக்கள் மேலதிக சான்றுகள் கிடைக்கப் பெறும்போது மேலும் செழுமைப்படுத்தப்படும்.